TNPSC Group 2 / 2A புதிய பாடத்திட்டத்திற்கு தயாராவது எப்படி?


TNPSC Group 2 தேர்வு அறிவிக்கப்பட்ட நாள் முதலே, உங்களில் பலர் புதிய பாடத்திட்டத்திற்கு எப்படி தயாராவது? எப்படி துவங்குவது? என பலவிதமான குழப்பங்களில் இருக்கிறீர்கள் என்பதை mail@tnpscportal.in க்கு வந்த மின்னஞ்சலில் மற்றும் comment  பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளின் மூலமும் தெரிந்து கொண்டேன். உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த பதிவை எழுதுகிறேன்.

'புதிய பாடத்திட்டம், எப்படி தயாராவது?' என்று பதட்டத்துடன் இருக்கிறீர்கள் எனில், இனிமேல் அந்த கவலையை, பதட்டத்தை விட்டு விடுங்கள். நான் ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்து கொண்டது போல பள்ளிப் பாட புத்தகங்களே உங்கள் வெற்றியின் மந்திரம். அதற்காக நீங்கள் வேறு எந்த கையேடுகளையோ, குறிப்புகளையோ படிக்காதீர்கள் என்று கூற வரவில்லை. ஆறாவது முதல் பத்தாவது வரையிலான அறிவியல், சமூக அறிவியல், தமிழ் பாட புத்தகங்களை ஒரு வரி கூட விடாமல் குறிப்பெடுத்து படித்து முடித்து விட்டு, நீங்கள்  அதற்கு மேல்  என்ன வேண்டுமானாலும் படித்துக்கொள்ளுங்கள்.

பொது அறிவு (75 கேள்விகள்)

Group 2 தேர்வைப் பொறுத்தவரை பொது அறிவுப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் பட்டய படிப்பு தரத்தில் (degree standard) இருக்கும். அதற்காக நீங்கள் அறிவியல் என்றால் BSc பாடத்திட்டங்களையும், வரலாறு, பொருளாதாரம், அரசியல் என்றால் BA பாடத்திட்டங்களையும் படிக்க வேண்டும் என்று தேவையில்லை. கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடப்புத்தகங்களிலே தான் கேட்கப்படும். ஆனால், வெளிப்படையான (open type) கேள்விகள் இல்லாமல் மறைமுக (indirect type) கேள்விகளாகவே கேட்கப்படும். மேலும் 6 முதல் 10 வகுப்புகளிலிருந்து மட்டும் கேட்காமல் 11, 12 வகுப்பு பொருளாதாரம், வரலாறு, தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட வாய்ப்பு உள்ளது பொது அறிவைப் பொறுத்த வரையில்  நாளிதழ்கள், வார இதழ்கள் என எங்கு பொது அறிவு தொடர்பான தகவல்கள் இருந்தாலும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

மறைமுக கேள்விகள் உதாரணம்

காளான், முட்டை, பால், வெள்ளரி ஆகியவற்றை இவற்றில் அடங்கியுள்ள நீரின் கொள்ளவின் அடிப்படையில் அடுக்குக ?

விடை : வெள்ளரி -95%, காளான் - 92%, பால் - 87 %, முட்டை - 73 %

இந்த தகவல்கள் ஆறாம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

எதைப் படித்தாலும் கேள்விகள் இது போன்று மறைமுகமாகவே வரும் என்ற நோக்கில் நீங்களே ஒரு கடினமான கேள்வியாக மாற்றி, படித்துக்கொள்ளுங்கள். அப்போது தான் கேள்விகள் எவ்வளவு கடினமாகக் கேட்கப்பட்டாலும் உங்களால் எளிதாக பதிலளிக்க முடியும்.

முந்தைய Group 2 தேர்வில் சமீப நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டன, எனவே குறைந்தது கடந்த ஒரு வருடத்தில் நடந்த சமீப நிகழ்வுகளை சேகரித்துக் கொள்ளுங்கள். வருகிற நாட்களில் நாங்களும் கடந்த 1 வருட சமீப நிகழ்வுகளை தொகுத்து வழங்க முயற்சிக்கிறோம்

மனத்திறன் பகுதி (25 கேள்விகள்)

மனத்திறன் (aptitude) பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் கீழ்கண்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்.

Conversion of information to dataCollection, compilation and presentation of dataTables, graphs, diagramsParametric representation of dataAnalytical interpretation of dataSimplificationPercentageHighest Common Factor (HCF)Lowest Common Multiple (LCM)Ratio and ProportionSimple interest
Compound interestAreaVolumeTime and WorkBehavioral abilityBasic terms, Communications in information technologyApplication of Information and Communication Technology (ICT)Decision making and problem solvingLogical ReasoningPuzzlesDiceVisual ReasoningAlpha numeric ReasoningNumber SeriesLogical Number/Alphabetical/Diagrammatic Sequences.

நீங்கள் இப்போது இருக்கும் நிலையிலேயே மனத்திறன் பகுதியில் கேட்கப்படும் 25 கேள்விகளில் 10 முதல் 15 கேள்விகளை சரியாக பதிலளித்து விடலாம். வருகிற நாட்களில் இப்பகுதிக்கான பாடங்களும் தொகுத்து வழங்கப்படும்.

பொதுத் தமிழ் (100 கேள்விகள்)

பொதுத் தமிழ் பாடத்திட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமானால், TNPSC அறிவிப்பிலேயே நீங்கள் SSLC Standard என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். 6 முதல் 10 வரையிலான தமிழ் பாடப் புத்தகங்களை ஒரு வரி கூட விடாமல், குறிப்பெடுத்து படித்தாலே 100/100 மதிப்பெண்கள் பெறுவது உறுதி. சமீபத்தில் நடந்து முடிந்த Group 4 தேர்வில் 6 ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலிருந்தே சில கேள்விகள் கேட்கப்பட்டன. உதாரணமாக, "வலசை போதல்" என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்கப்பட்டிருந்தது (பறவைகள் இடம்பெயர்தல்), இது ஒரு எளிதான, வெளிப்படையான கேள்வி. தற்போது பகுதி , பகுதி என இரு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள பாடப்பகுதிகள் அனைத்தையும் நீங்கள் 6 முதல் 10 வரையிலான தமிழ் பாட புத்தகங்களில் காணலாம். எனவே பொதுத் தமிழைப் பொறுத்தவரையில் தமிழ் பாடபுத்தகங்களை முதன்மையாக எடுத்துக்கொள்ளுங்கள், பள்ளி பாடபுத்தகங்களை முழுமையாக முடித்த பின்னர், சந்தையில் கிடைக்கும் ஏதாவது ஒரு பொதுத் தமிழ் கையேட்டை வாங்கி படியுங்கள். தற்போது சந்தையில் கிடைக்கும் பொதுத்தமிழ் கையேடுகளில் Prof.தேவிரா-வின் பொதுத்தமிழ் கெயேடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Source:
Previous
Next Post »

1 comments:

Write comments