இந்திய தேசிய சின்னங்களும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் முக்கிய தகவல்கள் :
1. தேசிய கொடி - ஜீலை 22 1947
●நீள அகல விகிதம் - 3:2
●தேசிய கொடியை உருவாக்கிய கொடி குழு தலைவர் - ஜே பி கிருபாளினி
● வடிவமைத்தவர் - பிங்கலி வெங்கையா ( ஆந்திரா)
2. தேசிய கீதம் - ஜனவரி 24 1950
● முதலில் பாடப்பட்ட நாள் - டிசம்பர் 27 1911. ( கல்கத்தா காங்கிரஸ் மாநாடு)
● இதனை ரவீந்தரநாத் தாகூர் 1919 ல் ஆங்கிலத்தில் "மார்னிங் சாங் ஆப் இந்தியா" என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார்.
● தேசிய கீதம் 52 வினாடிகளுக்குள் பாட வேண்டும். குறைந்த பட்சம் 20 வினாடிகளுக்குள் பாட வேண்டும்.
● பாடப்பட்ட மொழி- வங்காளம்.
● 1912 -ல் தாகூரின் தத்துவபோதினி இதழில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் முதன்முதலில் வெளியிடப்பட்டது.
3. தேசிய பாடல் - ஜனவரி 24 1950
● ஆங்கிலத்தில் ஸ்ரீ அரவிந்தரால் மொழிபெயர்க்கபட்டது
● பாடப்பட்ட மொழி- சமஸ்கிருதம்
● ஆனந்தமடம் (1882) என்ற பக்கிம்சந்திர சட்டர்ஜியின் நூலில் இருந்து இந்த பாடல் எடுக்கப்பட்டது.
● 1896 கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன்முதலாக ரவீந்தரநாத் தாகூரால் பாடப்பட்டது.
4. தேசிய சின்னம்- ஜனவரி 26 1950
● இதன் கீழே தேவநாகரி மொழியில் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்னும் வார்த்தைகள் முண்டக உபநிடத்தில் இருந்து எடுக்கப்பட்டு மனபொறிக்கபட்டுள்ளது.
5. தேசிய காலண்டர்- கனிஷ்கரின் சக ஆண்டு கி.பி.78 ஐ அடிப்படையாக கொண்டு மார்ச் 22 1957 லிருந்து தேசிய நாட்காட்டி அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
● லீப் வருடங்களில் மார்ச் 21 க்கு இணையாக வரும்.
● இந்தியா விடுதலையின் போது கிரிகோரியன் நாள்காட்டி பின்பற்றப்பட்டது.
6.தேசிய விலங்கு - வங்காள புலி (1972 லிருந்து)
● 1972 ற்கு சிங்கம் தேசிய விலங்காக இருந்து வந்தது.
● 1973 ல் ப்ராஜெக்ட் டைகர் என்ற புலி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது.
7. தேசிய பறவை - மயில்
8. தேசிய மலர் - தாமரை
9. தேசிய மரம் - ஆலமரம்
● இதன் அறிவியல் பெயர் - ficus benghalensis
10. தேசிய பழம் - மாம்பழம் ● இதன் அறிவியல் பெயர் - Mangipera indica
11. தேசிய பாரம்பரிய விலங்கு - யானை ( 2010)
12. தேசிய நிர்வாழ் உயிரி - கங்கை டால்பின் (2009)
13. தேசிய நதி - கங்கை (2008)
●10.07.2014 பட்ஜெட்டில் நமாமி கங்கை என்ற பெயரில் இதனை பாதுகாக்க 2037 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
● நமாமி கங்கை திட்டம் 1986 ல் ராஜூவ் காந்தியால் தொடங்கிவைக்கப்பட்டது.
14. தேசிய விளையாட்டு - ஹாக்கி
● தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 (தயான்சந்தின் பிறந்த நாள்)
● ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் இந்தியா இதுவரை எட்டு தங்க பதக்கங்களை வென்றுள்ளது.
● இறுதியாக 1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது.
15. தேசிய பானம் - தேநீர் (2012)
● அசாம் மாநிலத்தில் முதன்முதலாக தேயிலை பயிரிட்டவர் மணிராம் திவான். அவரது 212 வது பிறந்த நாள் 2013 ஏப்ரல் 17 தேதியை தேநீரை தேசிய பானமாக மத்திய அரசு அறிவித்தது.
No comments:
Post a Comment