திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு

திட்டமிட்டு படித்தால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு : டி.என்.பி.எஸ்.சி., தொடர்ந்து தேர்வுகளை நடத்துகிறது
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) 1947 காலியிடங்களை நிரப்ப குரூப் 2 ஏ தேர்வை அறிவித்துள்ளது.இது குறித்து மதுரை நேசனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் கூறியதாவது:தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் இளநிலை அலுவலர், வணிகவரி, பதிவுத் துறை, போக்குரவத்து, தொழில்நுட்ப கல்வி, பள்ளிக்கல்வி, ஊரக மேம்பாட்டு துறையில் 1947 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 ஏ தேர்வுக்கு அக்., 12 ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவ., 11. தேர்வு நாள் ஜன.,24. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பில்லை.

தேர்வு முறை: பொதுஅறிவு 75 வினாக்கள். இது பட்டப்படிப்பு தரத்தில் கேட்கப்படும். திறனறி தேர்வில் 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 100 வினாக்கள் ஆகியவை பத்தாம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். 300 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி தேர்வு எழுத வேண்டும்.

கடந்த இரண்டாண்டுகளாக திறனறி தேர்வுகள் நடத்தப்படுவதால், முதல்முயற்சியில் தேர்வெழுதுபவர்களுக்கு அதிக வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. எழுத்துத் தேர்வின் மூலமே பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. நேர்காணல் கிடையாது.

எதிர்பார்ப்பில் வி.ஏ.ஓ., தேர்வு: அடுத்ததாக வி.ஏ.ஓ., மற்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ளன. வி.ஏ.ஓ., தேர்வுக்கான 800 காலிப் பணியிடங்களுக்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினர் 21 - 30 வயதுக்குள்ளும், மற்ற பிரிவினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பொதுஅறிவு 75 வினாக்கள், கிராம நிர்வாக நடைமுறைகள் குறித்து 25 வினாக்கள், திறனறி தேர்வு 20 வினாக்கள், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 80 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் இருக்கும்.

குரூப் 4 தேர்வு: பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் 2500 காலிப்பணியிடங்கள் உள்ளன. குரூப் 4 தேர்விற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பொது அறிவு 75 வினாக்கள், திறனறி தேர்வு 25 வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள் வீதம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்பட்டோர், மிக பிற்பட்டோர் 32 வயது, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவர்களுக்கு வயது வரம்பில்லை.

பொதுப்பிரிவினருக்கு இச்சலுகை கிடையாது. பத்தாம் வகுப்பு பாடத்திட்ட அளவில் திறனறி வினாக்கள் கேட்கப்படும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு ஆறு முதல் பத்தாம் வகுப்பு பாடத்தை படிக்க வேண்டும்.குரூப் 2ஏ தேர்வுக்கு உங்களை தயார்படுத்திக்கொண்டால், தொடர்ந்து நடக்கும் குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வுகளுக்கும் அது பயனுள்ளதாக அமையும், என்றார்.

Thanks to,
http://www.kalvikural.net
Latest
Previous
Next Post »

4 comments

Write comments
TNPSC PRIME
AUTHOR
10 August 2017 at 07:00 delete

TNPSC GROUP 2A OFFICIAL ANSWER KEY RELEASED
https://tnpscprime.blogspot.in/2017/08/tnpsc-group-2a-official-answer-key.html

Reply
avatar
TNPSC PRIME
AUTHOR
17 August 2017 at 05:43 delete

For daily current affairs in Tamil https://tnpscprime.blogspot.in

Reply
avatar
Jisha
AUTHOR
21 February 2018 at 22:02 delete

rombe rombe useful article i will try to implement the ideas to crack tnpsc exam sir thanks for sharing

Reply
avatar